"தீந்தூரிகை" - தமிழறி நடாத்தும் நிகழ்நிலை மூலமான மாபெரும் ஓவியப்போட்டி 2024


"தீந்தூரிகை" - தமிழறி நடாத்தும் நிகழ்நிலை மூலமான மாபெரும் ஓவியப்போட்டி  2024


திருகோணமலை வளாக தமிழறி அமைப்பு பெருமையுடன் வழங்கும் "தீந்தூரிகை" ஓவியப் போட்டி உங்கள் கற்பனைக்கான திறவுகோல்.  ஆழ்மன எண்ணங்களை வர்ணங்களின் உதவியுடன் வெளிக்காட்டிடும் அரிய சந்தர்ப்பம். அனைவரும் கலந்து கொண்டு உங்கள் திறமைக்கான அங்கிகாரத்தைப் பெற்று தங்களின்  சிந்தனைக்கும் கலைநயத்திற்கும் பெறுமதியான பரிசில்களை வென்றிடுங்கள்.

- வர்ணத்தால் உறவாடுவோம்.....


போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கான நிபந்தனைகள். 
  • அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் பங்கு பற்ற முடியும்.
  • அனைத்து ஆக்கங்களும் 2024 ஜனவரி 31ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க பட வேண்டும் அதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
  • எந்த ஒரு தலைப்பின் அடிப்படையிலும் ஓவியம் வரைய முடியும்.
  • மாணவர்களின் தனித்துவமான ஆக்கமாக இருக்க வேண்டும்.
  • படைப்புகள் அனைத்தும் A3 (29.7 cm x 42 cm ) அளவுத்திட்டத்தில் அமைய வேண்டும்.
  • அனைத்து வகையான வர்ணப்பூச்சுகளையும் பயன்படுத்தலாம் மற்றும் பென்சில் ஸ்கெட்ச் ஆக்கங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • ஆக்கங்களின் மூலப்பிரதிகள் அனைத்தும் குறிப்பிட்ட முகவரிக்கு பதிவுத்தபால் மூலமோ அல்லது நேரடியாக சமர்ப்பிக்க கூடியவர்கள் நேரடியாகவும் சமர்ப்பிக்க முடியும்.
  • அனைத்து ஓவியங்களும் நடுவர் குழாமினால்  சரி பார்க்கப்பட்டு  பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும். 
  • அனைத்து ஓவியங்களும் தமிழறியின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டு விருப்புகளின்  அடிப்படையில் தீந்தூரிகை பிரசித்தி பெற்ற ஓவியத்துக்கான பெறுமதியான பரிசில் வழங்கப்படும்.
  • மூலப்பிரதிகளை அனுப்ப வேண்டிய முகவரி : தீந்தூரிகை, தமிழறி மாணவர் அமையம், திருகோணமலை வளாகம், கிழக்கு பல்கலைக்கழகம், கோணேசபுரி, நிலாவெளி - 31010

வெற்றி பெறும் போட்டியாளருக்கு தமிழறியினால் பெறுமதியான பணப்பரிசுகளும் நினைவுச்சின்னமும் வழங்கப்படும். அத்துடன் தமிழறியின் இணைய வெளியிலும் வெளியாகும் .

  • முதலாம்  பரிசு ரூ5000.00 
  • இரண்டாம் பரிசு  ரூ3000.00
  • பிரசித்தி பெற்ற ஓவியத்துக்கான பரிசு ரூ2000.00 









Comments