அகில இலங்கை ரீதியான கட்டுரை போட்டி 2022

 


அகில இலங்கை ரீதியான கட்டுரை போட்டி 2022 

தற்போதய நாட்டின் இன்னலான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருவரது ஆழ் மனதிலும் நான் ஜனாதிபதி ஆக இருந்திருந்தால் இவ்வாறு செய்திருப்பேன் என்ற எண்ணம் நொடிகளில் வந்து போயிருக்கும். அப்படியான எண்ணங்களை வரி வடிவில் வெளிபடுத்த ஒரு களம். கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக தமிழறி குழாமால் நடாத்தப்படும் கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு உங்கள் திறமையை வெளிப்படுத்துவதோடு பெறுமதியான பணப்பரிசில்களையும் வென்றிடுங்கள் 

 கட்டுரைக்கான தலைப்பு! 

  • நான் ஜனாதிபதி ஆனால்... 

கட்டுரை போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கான நிபந்தனைகள். 

 1. இலங்கையின் எப்பாகத்தில் இருந்தும் கட்டுரையை அனுப்பி வைக்கலாம் . 

 2. வயது எல்லை கிடையாது .

 3. ஒருவர் ஒரு கட்டுரையினை மாத்திரமே அனுப்பி வைக்கலாம். பலமுறை பகிரும் பட்சத்தில் முதலாவதாக கிடைக்கும் கட்டுரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். 

4. எழுத்துப்பிழைகள் இன்றி அமைதல் கட்டாயமானது. 

 5. 1000 சொற்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் . 

6.பிற மொழி சொற்களை இயலுமான வரை தவிர்த்தல் வேண்டும் . 

7. உங்கள் கட்டுரைகளை 2022.08.22 ஆம் திகதிக்குள் அனுப்பி வைத்தல் வேண்டும். 

8.உங்கள் கட்டுரைகளை கை எழுத்தாகவோ தட்டச்சு செய்தோ,PDF வடிவில் அனுப்பி வைக்கலாம் ( கை எழுத்தில் அனுப்புபவர்கள் உங்கள் கட்டுரைகளை தெளிவாக புகைபடம் எடுத்து PDF ஆக அனுப்பி வைக்க வேண்டும் ) 

வெற்றி பெறும் போட்டியாளருக்கு தமிழறியினால் பெறுமதியான பணப்பரிசுகளும் நினைவுச்சின்னமும் வழங்கப்படும். அத்துடன் தமிழறியின் இணைய வெளியிலும் வெளியாகும் .

 முதலாம் இடம் ரூ5000.00 

இரண்டாம் இடம் ரூ3000.00 

மூன்றாம் இடம் ரூ 1000.00

 கட்டுரைகளை அனுப்ப கீழ் உள்ள படிவத்தை நிரப்புங்கள் 👇👇 

📌 https://forms.gle/HA6onst2XBsq2R4U8

 


 

Comments

Post a Comment