தமிழ் விதைகள்

தமிழ் விதைகள்

வள்ளுவர்

 * இனம், மதம், மொழி, தேசம் கடந்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூலான  திருக்குறளை இயற்றிதமிழ்மொழியின் பெருமையை உலகறியச் செய்தவர்  திருவள்ளுவர் ஆவார்.

* இவர் உலகமக்களால் தெய்வப்புலவர், நாயனார் தேவர், பெருநாவவர், பொய்யாமொழிப்புலவர் என்றும் அழைக்கப்படுகிறார்.

* பாரதியும் ஒளவையும் போற்றும் அளவிற்கு தமிழ் நன்நெறி நூலாக திருக்குறள் விளங்குகிறது.

* ஜி.யு.போப் என்பவர் திருக்குறளை ஆங்கிலத்தில மொழிபெயர்த்தார்.

* திருவள்ளுவர் ஞானவெட்டியான்,பஞ்ச ரத்னம், சுந்தர சேகரம் எனும் நூல்களையும் எழுதியுள்ளார்.

* திருக்குறளை படிக்காத தமிழன் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னத படைப்பாளி திருவள்ளுவர் ஆவார்.


பாரதி

* "சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே அதை தொழுது படுத்திடடி பாப்பா" என்று குழந்தைகளுக்கு கூட தமிழின பெருமையை கவிதை மூலம் கூறிய வள்ளல் மகாகவி பாரதியார். 

* இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன்.

* இவரது கவிப்பாடும் ஆற்றலை கண்டு பாராட்டி எட்டயபுரத்து மன்னன் இவருக்கு பாரதி எனும் வழக்கினார்.

* இவர் தனது கவிதை மூலம் பெண்களுக்கு எதிராக நடந்த பல தவறுகளை சுட்டிக்காட்டினார்.

* எட்டயபுரத்து அரசவையில் கவிஞராகவும் பணியாற்றினார் அத்தோடு பத்திரிகையாளராகவும் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

* குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, பாஞ்சாலிசபதம் போன்றவையும் இவரால் இயற்றப்பட்டது.

* இது தவிர இதரியகீதங்கள், பகவத்கீதை முன்னுரை, என்பவற்றையும் சந்திரிகையின் கதை என்பவற்றையும் இயற்றியுள்ளார்.

* பிறமொழி இலக்கியங்களை மொழிபெயர்க்கவும்  செய்துள்ளார்.

* இவர் வாழ்ந்தது 39 வருடங்கள் ஆயினும் அவருடைய எழுத்திழைகள்  வழங்கிய  தமிழ்சுவை மிகப் பெரியதே.


ஔவையார்

* ஒளவையார் என்ற பெயரில் நான்கு புரவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறி இருக்கின்றனர்.

* முதலாம் காலகட்டத்தில் வாழ்ந்த ஔவையார் சங்க இலக்கியத்தில  59 பாடல்களை பாடியுள்ளார்.

* இரண்டாவது காலகட்டத்தில் வாழ்ந்த ஒளவையார் விநாயகர் பற்றிய பக்திப்பாடல்களை பாடியுள்ளார்.

* மூன்றாவது காலகட்டத்தில் வாழ்ந்த ஒளவையார் ஆத்திசூடி, கொன்றைவெந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களை பாடினார்.

*நான்காவது காலகட்டத்தில் வாழ்ந்த ஒளவையார் முருகனுக்காக தனிப்பாடல்களை பாடியுள்தாக கூறப்படுகிறது. 

 

தந்தை பெரியார்

* "மதம் மனிதனை மிருகமாக்கும் சாதி மனிதனை சாக்கடையாக்கும்" இக்கூற்றை கூறியவர் தந்தை பெரியார்.

* இவர் பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத் திருமணம், விதவைகளுக்கு மறுமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

* திராவிட கழகத்தை உருவாக்கியவரும் இவரே ஆவார்.

* இவருக்கு யுனஸ்கோ நிறுவனம் விருது வழங்கி கௌரவித்தது.

* சாதி வேற்றுமையை எதிர்த்தும் மூடநம்பிக்கைகளை எதிர்த்தும் குரல் எழுப்பினார்.

* "கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்" என்று கூறிச் சென்றுள்ளார் தந்தை பெரியார் அவர்கள்.

* இவரது ஈரோடு இல்லம் இன்று பெரியார் அண்ணா நினைவு இல்லம் எனப்படுகிறது.


கப்பலோட்டிய தமிழன்

 * சிதம்பரம்பிள்ளை எனும்இயர்பெயரைக்கொண்ட இவர் திருச்சியில் சட்டப்படிப்பை முடித்தபின் சொந்த ஊரில் ஏழைகளுக்கு இலவசமாகவும் சிறப்பாகவும் வாதாடினார்.

* ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பல் போக்குவரத்தை ஆரம்பித்தார்.

* தூத்துக்குடியில் நூற்பாலை  தொழிற்சாலையில் சரியான ஊதியத்தை வழங்குமாறு கோரி போராடி வெற்றி பெற்றார்.

* தூத்துக்குடி துறைமுகத்திற்கு இவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.

* இவரது வீடு இவரின் நினைவுச்சின்னமாக்கப்பட்டுள்ளது.

* இவர் கப்பலோட்டிய தமிழன் என்ற அடையாளத்துடன் இன்னும் மக்கள் மனதில் வாழ்கிறார்.


பாரதி தாசன்

*தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதங்களை முறையாக கற்று தமிழ் மொழியின் அருட் தொண்டாற்றியவர் பாரதிதாசன் அவர்கள்.

* அத்தோடு தனது முதல் தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினராகி அரசியலிலும் தனது தொண்டினை ஆற்றினார்.

* சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூட நம்பிக்கைகளை மக்கள் மனதிலிருந்து அழிக்கும் விதமாக பல படைப்புகளை வெளியிட்டார்.

* இவருக்கு பெரியார் "புரட்சிக்கவிஞர்" என்றும் அறிஞர் அண்ணா "புரட்சிக்கவி" என்றும் பட்டம் வழங்கினர்.

* இவர் "அமைதி ஊமை" என்ற நாடகத்தில் "தங்கக்கிளி" பரிசும் பிசிராந்தையார் நாடகத்திற்காக "சாஹித்து அகாடமி " விருதும் பெற்றார்.

* நமது கலாசாரமும் தமிழும் ஓரளவேனும் தலைநிமிர்ந்து நிற்க பாரதிதாசன் போன்றோர்களின் தமிழ் பணியே காரணம் என்றால் மிகையாகாது.


பெருந்தலைவர் காமராஜர்

* தமிழக அரசியல் வரலாற்றின் "பொற்காலம்" என போற்றப்படுவது பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதலமைச்சராக ஆண்ட 9 ஆண்டுகள் ஆகும்.

*இவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுப‌ட்டதோடு நாட்டின் கல்வி தரத்தை உயர்த்தவும் பாடுபட்டார்.

* இலவசமாக மதிய உணவு திட்டத்தை ஆரம்பித்தவரும் இவரே.

* கல்வியில் மாத்திரமன்றி பல தொழில் நிறுவனங்களை தொடங்கி நாட்டின் தொழில் வளர்ச்சியிலும் பங்காற்றினார்.

* ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நீர் முக்கியம் என்பதை அறிந்து பல நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றினார்.

* இந்திய அரசால் "பாரத ரத்னா" விருதும் பெற்றார்.

* உன்னை போல அரசியல்வாதி உலகில் இல்லை என்று கூறுமளவுக்கு வாழ்ந்து காட்டியவர் பெருந்தலைவர் காமராஜர்.



Comments